மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
யாழ். கச்சேரி கிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக யாழ். மாவட்ட போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபரை யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.