கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், கொலையைச் செய்த நபர் 30 வயதுடையவர் எனவும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.