ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (24) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதையும், அதன் ஊடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களைப் பற்றியும் ஆளுநரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்கான செயல்முறைகள் குறித்து ஆளுநருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.