Jaffna 360 Jaffna 360 Jaffna 360 Jaffna 360
    Jaffna 360 > Theevakam > Kovil > Nainativu Nagapooshani Amman
This content requires Adobe Flash Player and a browser with JavaScript enabled.
.
  நண்பருக்கு அறிமுகம் செய்ய/ Refer to Friend  
Phone No:  Address: Nagapooshani Amman Kovil, Nainativu Sri Lanka
Chavakachcheri Drieberg College
Nallur Kandaswamy Kovil
Keerimalai Theertham
Manipay Maruthady Vinayakar Temple

யாழ்குடா நாட்டிற்கு தென்மேற்காக அமைந்துள்ள பல அழகிய தீவுக்கூட்டங்களில் மிக அழகானதும் பசுமையானதுமான தீவே நயினாதீவாகும். இத் தீவு நான்கு மைல் சுற்றளவைக் கொண்ட ஒரு சிறிய தீவாகும். இச்சிறிய தீவில்தான் பல கோடி பக்தர்களுக்கு அருள் சுரக்கும் அறுபத்துநான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் புனேஸ்வரி பீடமென்று போற்றப்படுகின்ற நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் குடிகொண்டுள்ளாள். அம்பிகை குடி கொண்டிருக்கும் இத்தீவினை நாகதீவு மணிபல்லவம் பிராமணத்தீவு நாகபட்டினம் நயினாநகர் மணித்தீவு எனும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. மணிமேகலை எனும் காப்பியத்தில் கூறப்படும் மணிபல்லவம் நயினாதீவாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் குறிப்படுகின்றனர்.

சிறப்பு மிக்க நயினை அன்னையின் ஆலய தோற்றம் பற்றி கர்ண பரம்பரைக் கதையில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் தினந்தோறும் நாகபாம்பு ஒன்று கடல் வழியாக வந்து அன்னைக்கு பூக்கள் இட்டு அன்னையை அர்ச்சித்து வந்தது. ஒருநாள் அன்னையின் பூஜைக்காக நாகம் பூக்களை கொண்டு வரும் வளியில் கருடன் ஒன்று நாகத்தினை பிடிப்பதற்காக வழிமறித்தது. பயம் கொண்ட நாகம் கடலில் ஒரு கல்லுடன் சுற்றிக் கொண்டு மறைந்திருந்தது. கருடனோ நாகத்தினை பிடித்துண்ண மறுகல்லில் அமர்ந்திருந்தது. இவ் வரலாறு கூறும்; கற்கள் இரண்டும் தற்போது கோவிலின் வலப்பக்க கடலில் காணப்படுகின்றது. அவ்வேளை அந்த கடல் வளியினால் வந்த வணிகன் ஒருவன் அக்காட்சியினைக் கண்டுவிட்டு நாகத்தினை ஏதும் செய்ய வேண்டாம் விட்டு விடும்படி கெஞ்சுகின்றான். கருடனோ சரி நான் நாகத்தை விட்டு விடுகின்றேன் நீ எனக்கு என்ன தருவாய் எனக்கேட்கிறது. வணிகனோ என்னவேண்டுமானாலும் தருகின்றேன் கேள் என கூறுகின்றான். அதற்கு கருடன் சரி நாகத்தை விட்டு விடுகின்றேன் உன்னிடம் இருக்கும் பொன் பொருள் அனைத்தையும் எனக்குத் தா எனக் கேட்கின்றது. சற்றும் சிந்திக்காமல் வணிகம் தன்னிடம் இருந்த பொன் பொருள் அனைத்தையும் கருடனுக்கு வளங்குகின்றான். கருடன் நாகத்தினை ஏதும் செய்யாமல் அந்த இடத்தில் இருந்து பறந்து செல்கின்றது. அன்றிரவு வணிகன் தூங்கிக் கொண்டிருந்த வேளை அன்னையவள் வணிகனுக்கு பாரிய ஒளியாக காட்சி கொடுக்கின்றாள். இவ் அன்னையின் பாரிய ஒளியினைக்கண்ட வணிகன் அன்னையின் அருளினால் நாகதீவுக்கு வந்து அன்னையவளுக்கு பாரிய கோவில் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.

ஜந்தலை நாகத்தின் கீழ் அமர்ந்து கருவறையில் காட்சி தரும் அன்னையவள் கோடான கோடி பக்கத்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். பதினைந்த நாட்களை மகோற்சவ காலமாகக் கொண்ட மிக கோலாகலமாக நடை பெறும் திருவிழாவானது ஆவணிமாத பூரணையை தீர்த்த நாளாகக் கொண்டு ஆரம்பமாகும். உற்சவகாலம் ஆரம்பமாகியதும் குடும்பம் குடும்பமாக வரும் அடியார்கள் பதினைந்து நாட்களும் அன்னையின் திருத்தலத்திலே தங்கி அவளின் அருளினைப்பெற்று நேர்த்தி கடன் தீர்த்து உற்சவகாலம் நிறைவு பெற்றதுமே தம் ஊர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆலய வீதியில் திருட்டில் ஈடுபடும் தகாத செயல்களை செய்பவர்கள் கடல் கடக்கமுன்பு தண்டிக்கப்படுவார்கள் எனும் ஜதீகமும் நிலவுகின்றது. அதனால் பக்தர்களுக்கு தொல்லை தரும் நிகழ்வுகள் அவளின் திருத்தலத்தில நடத்தப்படுவதென்பது அரிதான ஒன்றாகும்.

அருள் தரும் அன்னையே பராசக்தி
ஆதியும் அந்தமும் நீயே பராசக்தி
தொல்லைதரும் வினையறுப்பாய் பராசக்தி
என்றும் எமைக்காத்தருள்வாய் பராசக்தி.

Sri Nagapooshani Amman Temple on the island of Nainativu in the Jaffna District of Sri Lanka is a very ancient Hindu temple. It is believed that this temple was originally erected many millennia before the birth of Lord Buddha, by the Nagas who were a pre-historic, Dravidian race of people who inhabited the Southern regions of India and Northern, Eastern and Western coastal areas of Sri Lanka, called Eelam during those days. The temple was originally erected and dedicated for the worship of the Serpent God called "Nayinar" by the Nagas. In the Nainativu temple, the object of worship in the sanctum sanctorum is a stone figure of a five-headed cobra. Nainativu is a tiny island about three miles long and one mile across. It is situated about 25 miles south-west of the Jaffna city.

Comments
Name:     Email:     Country:     CAPTCHA:   
facebook twitter
hit counters