Jaffna 360 Jaffna 360 Jaffna 360 Jaffna 360
About us
Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையும் மனநிறைவும் அடைகின்றோம்.
எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியினூடு  நேரில் பார்ப்பது போன்ற மெய்நிகர் அனுபவத்தை அள்ளி தருகின்றது Jaffna 360. நிச்சயமாக இந்த படைப்பு உங்கள் பாலர் காலம், பள்ளி நாட்கள், கோவில், குளம், இருந்த மதில்கள், நின்ற சந்திகள், காதலித்த இடம், கை பிடித்த இடம், பணி புரிந்த இடம், பழகிய இடம், இடம்பெயர்ந்த இடம், தோட்டம் தொலைவுகள், வெட்டை வெளிகள், திருவிழாக்கள், இயற்கைக் காட்சிகள் இன்னும் பலபல இடங்களை மெய்நிகர் வடிவில் வெளிபடுத்தி, உங்கள் பழைய நினைவுகளை மீட்டு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
பட்டம்விட்ட வயல்வெளி, படித்த நல்ல பள்ளிக்கூடம்
தேரிழுத்த கோயிலடி, சைக்கிள் ஓடின மண்புழுதித்தெரு
பக்கத்து ஊர்ச்சந்தை, பாலத்தடி, சந்திக்கடை
பார்த்து அவள் சிரிச்ச பக்கத்து குச்சொழுங்கை
ஊரைவிட்டு வந்தபின்னும் உள்ளம்விட்டு போகவில்லை
போட்டுவர ஆசைதான், நிலைமை இன்னும் தேறவில்லை
நேரிலபோய் நிற்பதுபோல் மெய்நிகராய் கண்டிடலாம்
ஊர்ப்பக்கம் போறதெண்டால் இனி இந்தப்பக்கம் வாருங்கோவன்

Comments
Name:     Email:     Country:     CAPTCHA:   
நான் பிறந்த ஊரை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ, அவ்வளவு அழகாக காட்டியுள்ளீர்கள். இதே போல் இதுவரை எந்த இணையத்தளமும் வந்ததில்லை. வளர்க உங்கள் பணி! வாழ்க உங்கள் மண் பற்று!!
- Ramanan (India)
Thanks a lot for creating this Superb web site. Although i had been to Jaffna few times recently, this site gives us a clear view(360 degree).of our native place .Keep up the good work and hats off to you.
- Thirukumar (Dubai, U.A.E)
Great and wonderful job. Pls update more places...
- Thiru (Sri Lanka)
அற்புதம்! மிகச் சிறப்பான ஆக்கம்! ஆக்கியோருக்கு உலகத் தமிழர்களின் நன்றிகள்!
- Bas Baskaran (USA)
Jaffna is a place I ever loved and wanted to visit badly. For 30 years we were away from this wonderful place. Would have visited many many times and would have had the beautiful relationships, friendships with the people there.
- Radhika Ranatunga (Sri Lanka)
Good and fascinating work. I enjoyed lot. Many thanks.
- Lal (Sri Lanka)
Great Job i appreciate that....
- FAWSAN.MCM (Srilanka)
வணக்கம்,
யாழ்ப்பாணம் மெய்நிகர் அமைப்பாளர்,

மிகச் சிறப்பான முறையில் உங்கள் யாழ்ப்பாணம் மெய்நிகர் தோற்றம் அமைந்துள்ளது. நயினை அன்னையின் ஆலய தோற்றத்தை அனைத்து அம்பிகையின் அடியவர்களும் அமர்ந்த இடத்திலே இருந்து பார்க்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. மிகவும் தத்துருவமான முறையிலான படப்பிடிப்பும் சிறந்த முறையிலான மெய்நிகர் வடிவமைப்பும். இதைக்காண்பதற்கு நிச்சயம் கண்ணாயிரம் வேண்டும்.

உங்கள் சேவை நயினை மண்ணுக்காக இன்னும் தொடர வாழ்த்துகின்றோம்.

நன்றி,
ஆசிரியர், நயினைத்தினசரிச் செய்தி, நயினாதீவு
- Nainativu DailyNews (Sri Lanka)
அண்ணா ஒரு சின்ன வேண்டுகோள், வசாவிளானில் உள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தையும் எடுத்துப் போட முடியுமா...? இங்கு படித்த ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்... உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
- Kirishanth (India)
Excellent work....Amazing
- Mathy (Sri Lanka)
Very good thinking, well done, keep up your good work, very nice see Jaffna schools and temples , bringing all the golden memories, in the meantime reminding everyone abroad with their duty to rebuild our town. Wish you all the very best whatever you do, may God bless you with good health and wealth.
- Mal (UK)
Such a wonderfull work mate!!. Keep it up
- Srikumar (Sydney)
Jaffna Central College looks beautiful! Nice job by the camera man. Thank you & God bless you.
- Shiyam (USA)
Very good. Good memories.
- Thillai (Canada)
I am very excited to see your works, really very attracting and precious work.
- Thuva (Sri Lanka)
Amazing job. I viewed all the clips. Thanks for the effort.
- Thevaguru (Canada)
facebook twitter
hit counters