Jaffna 360 Jaffna 360 Jaffna 360 Jaffna 360
Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையும் மனநிறைவும் அடைகின்றோம்.
எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியினூடு  நேரில் பார்ப்பது போன்ற மெய்நிகர் அனுபவத்தை அள்ளி தருகின்றது Jaffna 360. நிச்சயமாக இந்த படைப்பு உங்கள் பாலர் காலம், பள்ளி நாட்கள், கோவில், குளம், இருந்த மதில்கள், நின்ற சந்திகள், காதலித்த இடம், கை பிடித்த இடம், பணி புரிந்த இடம், பழகிய இடம், இடம்பெயர்ந்த இடம், தோட்டம் தொலைவுகள், வெட்டை வெளிகள், திருவிழாக்கள், இயற்கைக் காட்சிகள் இன்னும் பலபல இடங்களை மெய்நிகர் வடிவில் வெளிபடுத்தி, உங்கள் பழைய நினைவுகளை மீட்டு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
Jaffna 360 is a phenomenal initiative; it is an archive that takes us back with time, rewound our golden memories, and gives an exciting experience. What is time? Can you measure time? Does it have dimensions? No; not at all. Apart from that the time passed cannot be regained, we cannot say anything about time. We are proud and delighted in giving a virtual tour of the memorial records of our past.
More of our people are living outside our motherland than in. Many of them are unable to visit our motherland and enjoy the pleasure of revisiting the memorial places and sharing the memories with their families. They have locked their memories deep inside their heartand the pain they get due to this also immeasurable. Keeping all these in mind, Jaffna 360 brings the virtual tour of our nation, the memorable places in our life and monuments that are icon of our culture; the technological advancement has aided us to virtually see those and immerse in past memories.
Of course, there is no doubt that Jaffna 360 will take you on a virtual tour to your preschool days, school days, the temple and pond, the walls, junctionsand places you sat with your friends, the places where you made love, where you got married, work place, familiar place, where you were displaced and stayed, the garden and outdoors, festivals, and familiar scenes where you enjoyed your childhood and adulthood.
    Recent Posts
 Sankiliyan Manthiri Manai - Nallur 
 Karainagar Thikkarai Murugan Kovil 
 Keraitivu - Sangupiddy Bridge 
 Manipay Ladies College 
    Selected Post
 Alaveddy Kumpalawalai Pillaiyar Kovil 
 Tellipalai Sri Durga Devi Temple 
 Nainativu Nagapooshani Amman 
 Selva Sannithy Kovil 
facebook twitter
hit counters